Sunday, April 25, 2021

நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் அச்சம்!

சின்ன இங்கிலாந்து என வர்ணிக்கப்படும் நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

நுவரெலியாவிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு அரசாங்க அதிபர் அறிவித்திருந்த போதிலும் நுவரெலியா நகருக்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் சுற்றுலா பயணிகள் நேற்றையதினம் படையெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு வருகை தந்தவர்களில் பலர் முக கவசம் அணியாமலும் கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கான சுகாதார விதிமுறைகளை பேணாமலும் நடமாடியதாக அறியமுடிகின்றது.

இதனால் நுவரெலியா வாழ் மக்கள் கொரோனா தொற்று அச்சம் கொண்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!