கொவிட்-19 உயர் ஆபத்து வளையங்களாக மாறியுள்ள மாவட்டங்கள்!

கொவிட்-19 உயர் ஆபத்து வளையங்களாக கொழும்பு, கம்பஹா,குருநாகல் மாவட்டங்கள் மாறியுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சில பகுதிகளில் விரைவாக கொவிட்-19 அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சில வகையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் தற்போது இது நடைபெறுவதை காணமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.