பல்கலைக்கழக செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

 

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பல்கலைக்கழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு புத்தாண்டு முடிவுற்ற பின்னர் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னரே கல்வி நடவடிக்கைகளை இம்மாதத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.