புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்கு ஏழுமாறான பிசிஆர் பரிசோதனை செய்ய திட்டம்!புத்தாண்டுக்காக தத்தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களை இலக்கு வைத்து ஏழுமாறான பிசிஆர் பரிசோதனையை செய்ய திட்டமிட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக பொருளாதார வலயங்களில் கடமையாற்றுபவர்கள் குறித்து இதன்போது அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதென தொற்று நோயியல்பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வாரங்களில் புத்தாண்டை கொண்டாட பெரும்பாலானவர்கள் கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கு செல்வதால் இவர்கள் கொரோனாவுடன் செல்வதற்கு வாய்ப்புள்ளதால் இந்த எழுமாறான பரிசோதனை செய்யப்படவுள்ளது என்றார்.