சுகாதார விதிமுறைகளை மீறுவோரை கண்டறிய சிவில் உடையில் பொலிஸார் கடமையில்!


சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களை மீறும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சிவில் உடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


நாட்டில் சில பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலை காணப்படுகின்றது.

இதனையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொவிட் வைரஸ் பரவலையடுத்து சிறிய அளவிலான கொவிட் கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளது.

புதிதாக வைரஸ் கொத்தணி உருவாவதை கவனத்தில் கொண்டு தற்போது பொலிஸார் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளை துரிதமாக விரிவுபடுத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினத்தில் சிவில் உடையில் பொலிஸார் இந்த கடமையில் ஈடுபட்டனர்.வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களை பொதுமக்கள் எப்பொழுதும் கடைபிடிக்க வண்டும் உங்க கவசத்தை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி பொது மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்த கூடாது.

நேற்றைய தினத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களில 134 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டனர் கொழும்பு நகரத்தில் 34 பேரும் கம்பஹா பிரதேசத்தில் 45 பேரும் களுத்துறை பிரதேசத்தில் 50 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

2020 ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி தொடக்கம் இது வரையிலான காலப்பகுதியில் ஒரு நாளில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி அமைதி தொடர்பில் ஆகக் கூடுதலானோர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் இதுவரையில் 3647 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.