அவசர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை!

கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் அவசர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

எனவே ஆரம்பத்திலேயே கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

இதற்காக தம்மால் முடிந்த சுய பரிசோதனைகளை செய்துகொண்டு ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்கு சென்றால்,கொரோனா தொற்றை விரைவில் குணப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

முன்பு சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறி,தற்போது சோர்வை எதிர்நோக்கினால் அல்லது ஒரே மூச்சில் 1 தொடக்கம் 10 வரை எண்ண முடியாவிட்டால்,சில சொற்களை பேசும்போது சோர்வை உணர்தல் என்பன உங்களுக்கான சுயபரிசோதனை என தெரிவித்துள்ள அவர்,இது தவிர இந்த பரிசோதனைகளுடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் விரிவாக வைத்திய ஆலோசனை பெறுவது சிறந்தது எனவும் கூறியுள்ளார்.