Monday, April 26, 2021

அரசு ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் சுற்றறிக்கை நாளை!




நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிறுபம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்னசிறி தெரிவிக்கையில், அரசாங்கம் வழங்கியுள்ள சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவன மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!