Sunday, April 25, 2021

ஹட்டனில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

ஹட்டனில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று(24) உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(23) இந்த ஆசிரியர் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் நேற்றிரவு ஏற்பட்டிருந்த திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதால் பாடசாலையின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!