Sunday, April 4, 2021

அக்கரப்பத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் பலி!



தலவாக்கலை அக்கரப்பத்தனை ஹோல்புரூக் பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ரவிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீடொன்றுகாக நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே இவ்வாறு அவர் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு இச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!