தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை தடைசெய்ய இருக்கும் ஐசிசி!

ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி எவ்வித கிரிக்கெட் கவுன்சிலும் தனியார் அமைப்பு சார்பாக இருக்க வேண்டும்.

 உதாரணத்துக்கு இந்தியாவைப் பொருத்தவரையில் பிசிசிஐ போல் இங்கிலாந்தில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் போல ஒவ்வொரு நாட்டின் கீழிருக்கும் கிரிக்கெட் வாரியம் தனியார் அமைப்பு சார்பாகவே இருக்கவேண்டும்.

மேலும் அதில் அந்நாட்டு அரசாங்கம் நேரடியாக தலையிட கூடாது.ஆனால் இப்பொழுது தென்னாப்பிரிக்காவில் நிலைமை தலைகீழாக உள்ளது.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவுகளை அந்நாட்டு அரசாங்கம் தற்போது நேரடியாக கையாளும் பட்சத்தில் ஐசிசி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை தடை செய்யும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.