Tuesday, March 23, 2021

மாகாணசபை தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது!

 


உள்நாட்டில் மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் பேசப்பட்டுள்ளது. இருப்பினும் மாகாணசபை தேர்தல் பிட்போடப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று தெரிவித்த அரசாங்கம் இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காரணமெனக் குற்றம் சாட்டியது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

கடந்த ஆட்சியின் போது மாகாணசபை முறைமை தேர்தல், முறைமைக இரத்து செய்யப்பட்ட நிலையில் புதிய தேர்தல் முறைமையும் முரண்பாடான தன்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறான பின்னணியிலேயே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டது இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தமது 16 ஆசனங்களை அப்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவாக பயன்படுத்தினார்கள் ஆகவே மாகாணசபை தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது.

 

தேர்தல் முறையில் காணப்படும் சிக்கல்களுக்கு சட்ட ரீதியில் தீர்வு காண்பது அவசியம்.இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவுடன் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்.ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது நாட்டில் காணப்பட்ட தீவிரவாதம், பிரிவினைவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து நாட்டில் அமைதியை ஏற்படுத்துமாறு கோரியே,நாட்டு மக்கள் அவரிடம் நாட்டை ஒப்படைத்தனர்.

 

இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் போலியான குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!