பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சாரதிகளுக்கான அறிவுறுத்தல்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை பின்பற்றாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவதானமாக செயற்படுமாறும் சாரதிகளுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.