Thursday, March 18, 2021

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் புதிய மசோதாவுக்கு அமையவே நடைபெற வேண்டும் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு அமையவே நடைபெற வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி கட்சியின் மத்தியகுழு கூடவுள்ளதாக பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தற்போது செயல்பட்டு வரும் மாகாண சபைகளை செயல்படுத்துவதற்காக புதிய அல்லது பழைய முறை என ஏதாவது ஒரு முறையில் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.

மாகாணசபை தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக அமைச்சரவை எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் தமது கட்சி உடன்படுவதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மாகாணசபை தேர்தலை பழைய முறையின்படி நடத்துவதே கட்சியிலுள்ள பெரும்பான்மையானவர்களின் கருத்து என ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிடுகின்றது.

இதுதொடர்பாக கட்சி மேலும் கலந்துரையாடல்களை நடத்தும் என்று தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!