சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாம் ஆண்டு நிறைவு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இன்று(15) பிற்பகல் 2.30க்கு நடைபெறவுள்ளது.

"சவால்களை வென்றெடுக்க ஓரணியில் நிற்போம்" எனும் தொனிப்பொருளிலேயே முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுடன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக ஆகக்கூடிய ஆசனங்களை பெற்று பங்காளிகளை இணைத்துக்கொண்டு எதிர்க்கட்சியானமை குறிப்பிடதக்கது.