சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் 'அண்ணாத்த' இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
மேலும் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,மீனா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பல காரணங்களுக்காக தடைப்பட்டுவந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெகபதிபாபு ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.