இலங்கை பாடசாலைகளுக்கான சுத்தமான குடிநீர் வசதிகளையும் ஏனைய சுகாதார வசதிகளையும் வழங்க ஐக்கிய அரபு எமிரேற்ஸின் ஷெக் ஸாயித் மன்றம் முன்வந்துள்ளது.
மன்றத்தின் தலைவருடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக இந்த உதவி இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது.ஷெக் ஸாயித் மன்றம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் அலுவலகங்களின் ஊடாக பல்வேறு நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.