கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து!

கிராண்ட்பாஸ்,காஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(15) அதிகாலை 2.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தையடுத்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.