Friday, March 12, 2021

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி செயறபாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாட்டில் உள்ள அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத்து அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு திறக்கப்படும் பல்கலைகழகங்களில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை ஏப்ரல் முதல் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!