Friday, March 12, 2021

எல்டேயார்(Altair) மாடி வீடு அபிவிருத்தி திட்ட கட்டிடத் தொகுதி இன்று திறப்பு!



நாட்டின் கட்டிட நிர்மாணத் துறையில் புதிய அனுபவங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு கொம்பனி வீதி எல்டேயார் கலப்பு அபிவிருத்தி திட்டத்திலான (Altair multi-storey mixed housing project) முதல் கட்டமைப்பு இன்று (12) மாலை திறக்கப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி நாலக்க கொடஹேவா, அஜித் நிவாட் கப்ரால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த கட்டிடத் தகுதி 230 மீட்டர் உயரத்துடன் 68 மாடிகளைக் கொண்டது.இதில் வீடுகள்,வர்த்தக கட்டிடங்களும் அமைந்துள்ளது.இது ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ஸ்ரீ நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

தடைப்பட்டிருந்த இந்த நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இத்திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நிர்மாண பணிகளை துரிதப்படுத்தி பணத்தை செலவிட்டுள்ள திட்ட உரிமையாளர்களுக்கு வீடுகளை துரிதமாக வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

சவுண்ட் சிட்டி மற்றும் இந்தியன் ஓசேன் நிறுவனம் இதன் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!