Friday, March 12, 2021

இலங்கை தேசிய கொடி அவமதிப்பு - Amazon இற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இணையத்தின் ஊடாக பொருட்களை விற்பனை செய்யும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று இலங்கை தேசிய கொடியின் உருவத்துடனான கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை அதன் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளது.

Amazon இணையதளத்திலேயே குறித்த பொருட்கள் விற்பனைக்காக விடப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை இலங்கையர்களும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

12 அமெரிக்க டொலருக்கு குறித்த கால் துடைப்பானை விற்பனைக்கு பதிவிட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 9 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கையில் இந்த விடயம் மிகவும் கவலை அளிப்பதாகவும் இது தொடர்பில் இன்று காலை முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு மற்றும் தூதரகங்கள் ஊடாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!