Sunday, March 7, 2021

கொவிட் ஒழிப்புக்கான தடுப்பூசிகள் விசேட விமானத்தின் மூலம் இன்று (07) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!

கொவிட் ஒழிப்புக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வசதிப்படுத்தலின்கீழ் 20 சதவீத தடுப்பூசிகள் இன்று(07) அதிகாலை விசேட விமானம் மூலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய 264,000 எஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் முதற்கட்டமாக நாட்டுக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

யுனிசெப் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசிகள் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!