Sunday, March 7, 2021

தலவாக்கலை நகரில் மதுபான விற்பனை நிலைய முகாமையாளர் ஒருவருக்கு கொவிட் தொற்று!

தலவாக்கலை நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றின் முகாமையாளருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் குறித்த மதுபான நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள முகாமையாளர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து தலவாக்கலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மேற்படி மதுபான விற்பனை நிலையத்தில் மதுபானம் கொள்வனவு செய்தவர்கள் இருப்பின் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!