வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி!


வெலிக்கடை ஆயுர்வேத சுற்றுவட்டத்தின் அருகே இன்று(23) 4:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவியாளர் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

 

வெலிக்கடை மேம்பாலம் மற்றும் ஆயுர்வேத சுற்று வட்டத்திற்கு இடைப்பட்ட வலையத்தில் கொழும்பு அவசரநிலை பதிலளிப்பு பிரிவின் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

அப்போது சிறிய ரக லொறி ஒன்றை அவர்கள் சோதனை செய்து கொண்டிருந்தவேளை பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கி வேகமாக பயணித்த வேன் அவர்கள் இருவரையும் மோதியுள்ளதாக அவர் கூறினார்.

 

இதனையடுத்து தலவத்துகொடையை சேர்ந்த வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அண்மைகாலமாக நாடு முழுவதும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்