தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்.

 


தேசிய அடையாள அட்டையை ஒரு நாள் சேவையின் கீழ் பெற்றுக் கொள்ளும் முறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இந்த சேவையானது கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் கடந்த காலங்களில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

 

மேலும் யாரேனும் ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்காக பத்தரமுல்லை தலைமைக் காரியாலயத்திற்கு அல்லது தென்மாகாண காரியாலயத்திற்கு வர இருப்பார்களாயின் அதற்கான குறித்த திகதி மற்றும் இலக்கம் ஒன்றையும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்காக குறித்த பிரதேச செயலாளர் காரியாலயத்தின் தேசிய அடையாள அட்டை பிரிவிற்குச் சென்று அல்லது 

011-5226100 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு இந்த சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

 

மேலும் பொதுவான சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டையை பெற விரும்புபவர்கள் தமது விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தரின் ஊடாக குறித்த பிரதேச செயலாளர் காரியாலயத்தின் அடையாள அட்டை பிரிவுக்கு அனுப்பி வைக்க முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இந்த விண்ணப்ப படிவம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு கிடைத்த பின்னர் தேசிய அடையாளஅட்டை அச்சிட்டு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்