அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயற்பட்டு வருகின்றது.
அங்கு
மர்ம நபர் ஒருவர் திடீரென
நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.இதனால்
அங்கிருந்த மக்கள் அலறி அடித்தபடி ஓடியுள்ளனர்.
தகவலறிந்து
பொலிஸார் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.இதன்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலியானதாக முதல்
கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும்
துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம
நபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.தொடர்ந்து அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.