Tuesday, March 9, 2021

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனை.

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இரு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 34 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கியுள்ளது.

இந்த தண்டனையை 15 வருடங்களில் நிறைவு செய்ய வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதற்கும் மேலதிகமாக பிரதிவாதிக்கு பத்தாயிரம் ரூபா தண்ட பணத்தையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அந்த நஷ்ட ஈட்டு தொகையை செலுத்த தவறினால் பிரதிவாதிக்கு ஐந்து வருட சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விளையாடுவதற்காக வந்த அயல்வீட்டு சிறுமியை தனது பிள்ளைகளை வெளியில் அனுப்பிவிட்டு குறித்த நபர் துஸ்பிரயோகப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் குற்றவாளிக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளில் 2 சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.மூன்றாவது குற்றச்சாட்டிலிருந்து பிரதிவாதியை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!