Thursday, February 11, 2021

எஸ்ட்ரா செனகா தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

இந்திய தயாரிப்பான எஸ்ட்ரா செனகா(Astra zeneca vaccine) என்ற covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான 16 இலட்சம் தடுப்பூசி இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைச்சின் கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை மக்கள் தொகையில் 20 சதவீதத்தினருக்கு 16 லட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பங்களிப்பு செய்துள்ளது.

முதலாவது கட்டத்தின் கீழ் வழங்கப்படும் 16 லட்சம் தடுப்பூசி களுக்கு பின்னர் ஏனைய வற்றையும் பெற்றுக்கொடுப்பதற்கு கொவெக்ஸ் நிறுவனம் உடன் பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகத்தின் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் விசேட பிரதிநிதி விசேட வைத்தியர் பாலித அபயகோன் தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!