Thursday, February 11, 2021

ஆபத்தான நிலையை நோக்கி இலங்கை ; நாட்டு மக்கள் அனைவருக்குமான முக்கிய எச்சரிக்கை!

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 955 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இரண்டாவது நாளாகவும் நாட்டில் 900க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாட்டில் இதுவரை 72,166 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் நாட்டில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 976 ஆகும்.

இதேவேளை இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிபடுத்தினார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!