Monday, February 8, 2021

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சம்பள நிர்ணய சபையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சம்பள நிர்ணய சபையில் இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மூன்று அரச பிரதிநிதிகளும் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!