உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி களுடன் தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
73வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அதன் பிரகாரம் தாக்குதலுடன் தொடர்புடைய தரப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.