இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலானது மே மாதம் 20 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதியான உறுப்பினர்கள் தொடர்பில் வருகின்ற சனிக்கிழமை(06) அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24ஆம் திகதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தேர்தலானது பின்வரும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற உள்ளது.
தலைவர் ,துணைத் தலைவர்,செயலாளர்,உதவி செயலாளர்,பொருளாளர்,உதவி பொருளாளர்.