Friday, February 19, 2021

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக இருந்த டேவிட் சேகர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதையடுத்து இலங்கைக்காண வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி முதல் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக டேவிட் சேகர் இருந்து வந்துள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களினால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.