கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.1 வருடம் 3 மாதங்கள் குறித்த ஆணைக்குழு சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததுடன்,சுமார் 450 பேரின் சாட்சியங்கள் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.