நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றானது சைப்ரஸ்,ஜோர்தான்,துபாய் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மூலம் பரவியுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள 16 பேரில் 13 பேர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பம்பைமடு, முழங்காவில் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர் எனவும் ஏனையோரில் ஒருவர் அவிசாவளை பிரதேசத்திலும் மற்றைய இருவர் கொழும்பு பகுதியிலும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் மேற்படி வைரஸ் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் அடையாளம் காணப்பட்ட தொற்றுடன் ஒத்ததென கண்டறியப்பட்டுள்ளது.