Thursday, February 25, 2021

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக நாளை விசேட சேவை!

2021 மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கும் பணிகளுக்காக மட்டும் நாளை(26) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல்,வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாகாண அலுவலகங்கள் காலை 8.30 மணி தொடக்கம் பகல் 1.00 மணி வரை திறந்திருக்கும் என்றும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.வீ.குணதிலக்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் இந்த விசேட சேவை நடத்தப்படுவதுடன் இதற்காக அதிபர்கள் அல்லது கிராம உத்தியோகத்தர்களால் உறுதி செய்யப்பட்ட மற்றும் முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப் பத்திரத்துடன் வருமாறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!