Thursday, February 25, 2021

சாதாரணதர மாணவர்களுக்கான சில முக்கிய அறிவுறுத்தல்களை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் மார்ச் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான சில அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளதால் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு கொண்டுசெல்ல வேண்டும்.இவை இல்லாதவர்கள் பரீட்சைகள் ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படத்துடனான கடிதத்துடன் பரீட்சை நிலையத்துக்கு வருகை தரவேண்டும்.

பரீட்சை மண்டபத்துக்கு முன்னதாக வருகை தந்து அனுமதி அட்டை,விண்ணப்பித்த பாடம்,பாட இலக்கம் என்பவற்றை சரிபார்த்தல் வேண்டும்.

அனுமதி அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய onlineexams.gov.lk இன்று இணையதளத்தில் பிரவேசித்து அதனை சீர் செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!