Monday, February 1, 2021

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான வாகன திட்ட ஒத்திகை தொடர்பில் அறிந்து கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்.


 சுதந்திர தின நிகழ்வுகளுக்காக சுதந்திர சதுக்கம்,சுதந்திர மாவத்தை ஆகிய பகுதிகளில் விசேட வாகன திட்டம் தொடர்பான ஒத்திகை.

73வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு அமைவாக சுதந்திர சதுக்கம்,சுதந்திர மாவத்தை ஆகிய பகுதிகளில் விசேட வாகன திட்டம் தொடர்பிலான ஒத்திகை நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த 30ஆம் திகதி தொடக்கம் பிப்ரவரி 3ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த சுதந்திர தின வைபவ ஒத்திகையின் காரணமாக காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரையில் விஷேட வாகன திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது தொடர்பில் 0112433333 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் வாகன போக்குவரத்து தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!