Monday, February 15, 2021

இன்னும் இரண்டு வாரங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி!


சாதாரண பொதுமக்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டினால் கோரப்பட்டுள்ள 5 லட்சம் தடுப்பூசிகள் இவ்வாரம் கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 9 லட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு தொகை தடுப்பூசிகளை மார்ச் மாதத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!