பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
முன்னதாக
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோருக்கு இடையிலான விசேட இருதரப்பு கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது
இரு நாடுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏதுவான பல விடயங்கள் தொடர்பாக
வெற்றிகரமான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதலீடு,வர்த்தக மேம்பாடு ,விவசாயம்,சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்த பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.