பரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்து இணையம் ஊடாக 17,45,000 ரூபாயை மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை
பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய களணி பிரிவு
குற்ற விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு
கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களுள் 4 பேர் நைஜீரிய பிரஜைகள்,
இரண்டு பெண்கள் மற்றும் இலங்கை தம்பதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம்
முன்னெடுத்த விசாரணைகளையடுத்து குறித்த நைஜீரிய பிரஜைகள் தங்கியிருந்த கல்கிசை பிரதேச வீடொன்றிலிருந்து மடிக்கணினிகள் 2, வெவ்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் 79,போலி
நாணயத்தாளை அச்சிட பயன்படும் கடதாசி மற்றும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
வெளிநாடுகளில்
இருந்து தொலைபேசி அழைப்பு எடுப்பது போல் இங்கையில் இருந்தவாறே
இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை
தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.