Tuesday, February 23, 2021

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் - உயர்தர வகுப்புக்கள் ஜூலை மாதம் ஆரம்பம்!

 


மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை நடைபெறவிருக்கும் .பொ. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை ஜூன் மாதமளவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும்,அதன்படி அந்த மாணவர்களுக்கு ஜூலை மாதம் முதல் .பொ. உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

 

இம்முறை .பொ. சாதாரண தரப் பரீட்சைக்கு நாடு பூராகவும் 622,305 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 4,513 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.அவர்களுள் 423,746 பேர் பாடசாலைகளின் ஊடாகவும் 198,606 பேர் தனிப்பட்ட ரீதியாகவும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.அத்துடன் பரீட்சைக்காக 542 ஒருங்கிணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் 2 பரீட்சை நிலையங்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறான நிலையங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் அதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

 

அத்துடன் இதுவரையிலும் அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறவில்லையாயின் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!