Monday, February 8, 2021

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் .lk டொமைனை பதிவு செய்ய நடவடிக்கை!

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் .lk டொமைனை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை முதல் .lk இணையதள முகவரிகள் பல செயலிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலுக்கு உள்ளான சில இணையதளங்களின் முகவரிகளை வேறு இணைய தளங்களுக்கு செல்லும் வகையில் சிலர் மாற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளங்களில் தரவுகள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!