Monday, February 1, 2021

வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுவோர் சுகாதார சட்ட விதிகளை மீறுவதாக தகவல்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய மேலும் 255 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினத்தில் கொழும்பு நகர் முழுவதிலும் இது தொடர்பில் விசேட நடவடிக்கை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

வீடு மற்றும் பல்வேறு சுற்றாடல் பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர்கள் சுகாதார வழிகாட்டல்களை மீறி செயல்படுவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இவ்வாறானவர்கள் தொடர்பில் தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!