இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில் தடுப்பூசி தொகையானது நாளை மறுதினம் நாட்டை வந்தடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இந்தியாவில் இருந்து 6 லட்சம் தடுப்பூசிகள் பெறப்படும் என கூறியிருந்தார்.
எவ்வாறெனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்ட கால உறவையும் கடந்த ஆண்டு கொவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொண்டு இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கருத்தில் கண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
இதேவேளை தடுப்பூசி வழங்குவது தொடர்பான அடிப்படை ஒத்திகை தற்போது வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டிற்கு கிடைக்க உள்ள தடுப்பூசி தொகையில் முதலாவது கட்டம் கிடைத்தவுடன் கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு பங்களிக்கின்றன முன்னணி உறுப்பினர்களுக்கு இதனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது