ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோன் பைடனின் நிர்வாகமானது மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்கு அழுத்தத்தை வழங்கவுள்ளதை தொடரவுள்ளது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா மீள இணையுமா என்பது பற்றி இப்போது கூற முடியாது என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.டெப்லிஸ்ட், கொழும்பில் உள்ள செய்தியாளர்களிடம் நேற்று(26) தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இலங்கையில் உண்மையான அமைதி நிலவுவதை உறுதிப்படுத்துவதற்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என டெப்லிஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் விடயத்தில் முன்னைய அரசாங்கத்தாலும் தற்போதைய அரசாங்கத்தாலும் மெதுவான முன்னேற்றமே காணப்படுவதாக டெப்லிஸ்ட் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, மனித உரிமைகளுக்கான ஆதரவானது இலங்கையை அச்சுறுத்துவதற்கான முயற்சியொன்றாக பார்க்கப்படக்கூடாது என டெப்லிஸ்ட் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் சபையானது பக்கச்சார்பாக உள்ளதாக தெரிவித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகமானது அதிலிருந்து விலகியிருந்தது.