கொவிட் -19 தொற்றுக்கான தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சினாபாம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளில் 3 லட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த தடுப்பூசியை பிப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது.