இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஒக்ஸ்போர்ட் எக்சாசெனியா கொவிசீல்ட் என பெயரிடப்பட்டுள்ள 5 லட்சம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இந்திய விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று காலை 11:35 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டகொரோனா தடுப்பு ஊசிகள் இலங்கையை வந்தடைந்தது.
இதில் 42 பெட்டிகளில் பொதியிடப்பட்ட சுமார் 5 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்து தாகவும் இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கேயிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
நாளையில் (29)இருந்து தடுப்பூசி போடுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Thursday, January 28, 2021
