Thursday, January 28, 2021

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமரின் செயலாளர் தலைமையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் மாணவர்களினால் தாக்கல் செய்த மேன்முறையீடுகளின் அடிப்படையிலேயே இந் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!