Wednesday, January 27, 2021

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!



மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் பத்தாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு இன்று(27) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர் எச்.ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் பாடசாலை மாணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

இதனையடுத்து மேற்படி மாணவன் கல்வி பயின்ற வகுப்பில் அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தபட்டுள்ளதுடன் மாணவனுடன் நேரடி தொடர்பு வைத்திருந்த மேலும் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 573 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 160 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!