சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக பிபிசி சிங்கள சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
அவருக்கு நடத்தப்பட்ட ரபிட் ஆன்டிஜன் பரிசோதனையின்போது கொரோனா தொற்றுக்கள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் பிபிசி சிங்கள இணையதளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக சுகாதார அமைச்சு இன்னமும் கருத்து வெளியிடவில்லை.
தம்மிக்க பண்டார என்பவர் தயாரித்த கொரோனா பாணியை பருகியவர்களில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் ஒருவராவார்.